ADDED : ஜூலை 17, 2025 02:09 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 18ம் தேதி உயர்கல்வி சேர்வதற்காக, மாணவர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர்பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் கலெக்டர்அலுவலகத்தில், அனைத்து மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, உயர்கல்வி ஆலோசனை மைய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
பெற்றோர் மற்றும் மாணவர்கள், கட்டுப்பாட்டு அறையினை 9344410803, 7550057547 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இக்கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு மாணவர்களின் உயர்கல்வி தொடர்வதை எளிமைபடுத்துவதற்காகவும், மாணவர்கள் சந்திக்கும் நிர்வாக சவால்களை மாவட்ட நிர்வாகம் களைந்து அனைவரும் உயர்கல்வி சேர்வதை உறுதிபடுத்தவும், வரும் 19ம் தேதி காலை 10:00 மணியளவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாணவர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் போதிய சான்றிதழ்கள் இல்லாமை, குடும்பம் மற்றும் சமூக சூழல் காரணமாக, கல்லுாரி சேர்வதில் சிக்கல், உயர்கல்வி சேர்வதில் சவால் உள்ளிட்டவற்றுக்கு, முறையான ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.