/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
படிக்கட்டில் பயணித்த மாணவர் படுகாயம்
/
படிக்கட்டில் பயணித்த மாணவர் படுகாயம்
ADDED : மார் 21, 2025 11:44 PM
திருத்தணி,திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 18. இவர், திருத்தணி அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் பயணியத்தார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சில மாணவர்கள் படியில் நின்று பயணித்ததாக கூறப்படுகிறது. இதில், புருஷோத்தமன் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தார். விநாயகபுரம் அருகே சென்றபோது, புருஷோத்தமன் திடீரென கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.