/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு
/
போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு
போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு
போதை பொருள் இல்லாத தமிழகம் மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 11, 2025 11:17 PM
திருவள்ளூர்,
திருவள்ளூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவியரின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 'போதை பொருட்கள் இல்லாத தமிழகம்' பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். மேலும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய, பள்ளி, கல்லுாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.