/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ஏரிகளை சீரமைக்க சர்வே செய்யும் பணிகள் 'விறுவிறு'
/
திருத்தணியில் ஏரிகளை சீரமைக்க சர்வே செய்யும் பணிகள் 'விறுவிறு'
திருத்தணியில் ஏரிகளை சீரமைக்க சர்வே செய்யும் பணிகள் 'விறுவிறு'
திருத்தணியில் ஏரிகளை சீரமைக்க சர்வே செய்யும் பணிகள் 'விறுவிறு'
ADDED : ஜன 09, 2025 09:44 PM
திருத்தணி,:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இதிலும், ஏரிப்பாசனத்தை நம்பி அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி நிர்வாகம், 27 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். இந்த ஏரிகள் சீரமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளதால் நீர்வரத்து கால்வாய், கரைகள், மதகு மற்றும் கடைவாசல் கால்வாய்கள் சேதம் அடைந்தும் புதைந்தும் உள்ளன. இதனால் பருவ மழையின் போது ஏரிக்கு நீர்வரத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய நிர்வாகம், 27 ஏரிகளை சீரமைக்கவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் தீர்மானித்து, ஏரிகளை சர்வே செய்யும் பணியில் ஒன்றிய பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து திருத்தணி ஒன்றிய பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
ஒன்றியத்தில் உள்ள, 27 ஏரிகளை துார்வாரி, கரைகள் பலப்படுத்துதல், மதகு, கடைவாசல் மற்றும் நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதற்காக ஏரியின் அளவு பொருத்து, ஒவ்வொரு ஏரிக்கும் குறைந்தபட்சம், 2.50 லட்சம் ரூபாய் முதல், அதிகபட்சமாக, 7.50 லட்சம் ரூபாய் வரை நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.
மூன்று கட்டங்களாக நிதி ஓதுக்கீடு செய்து, ஒவ்வொரு கட்டடத்திற்கும் குறைந்தபட்சம், 8 ஏரிகள் தேர்வு செய்யப்படும்.
அந்த வகையில் முதற்கட்டமாக, வீரகநல்லுார், கன்னிகாபுரம், சூர்யநகரம், செருக்கனுார், சத்திரஞ்ஜெயபுரம் உட்பட எட்டு ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் மேற்கண்ட, ஐந்து ஏரிகளில் சர்வே பணிகள் முடிந்துள்ளன. இதன் பராமரிப்பு பணிகள், ஏரியில் தண்ணீர் வற்றிய பின் பணிகள் துவங்கப்படும். இந்தாண்டில், 20 ஏரிகளை சீரமைக்க தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.