/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலக கோப்பை கிக் பாக்ஸிங் களமிறங்கும் தமிழக வீரர்கள்..
/
உலக கோப்பை கிக் பாக்ஸிங் களமிறங்கும் தமிழக வீரர்கள்..
உலக கோப்பை கிக் பாக்ஸிங் களமிறங்கும் தமிழக வீரர்கள்..
உலக கோப்பை கிக் பாக்ஸிங் களமிறங்கும் தமிழக வீரர்கள்..
ADDED : செப் 24, 2024 06:42 AM

சென்னை: நடப்பாண்டிற்கான உலக கோப்பை 'கிக் பாக்ஸிங்' சாம்பியன்ஷிப் போட்டிகள், உஸ்பெகிஸ்தான், தாஷ்கண்ட் நகரில் இன்று துவங்கி செப்., 29ம் தேதி வரை நடக்கிறது.
இதில், வயது மற்றும் எடை பிரிவின் கீழ், இந்திய அணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர் - வீராங்கனையர் களமிறங்க உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்க பொதுச் செயலர் மற்றும் இந்திய கிக் பாக்ஸிங் அணி தலைமை பயிற்சியாளர் சுரேஷ் பாபு கூறுகையில், ''உலக கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, கனிஷ் கண்ணா, 8, நிதிஷ் கண்ணா, 12, யோகேஷ், 14, வினாயக் குரு, 9, சுரேஷ் அஷ்வின், 11, சபரி கிருஷ்ணன், 19, ஆகிய வீரர்கள்.
''அங்கயற்கண்ணி, 20, தீப லட்சுமி, 15, ஜிவந்திகா, 13, சுபாஷினி, 18, நிவேதா, 16, ஆகிய வீராங்கனையரும், இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கின்றனர்; பதக்கத்துடன் நாடு திரும்புவர்,'' என்றார்.