/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
12.50 லட்சம் கிலோ பயறு கொள்முதல் செய்ய இலக்கு!: திருவள்ளூர் மாவட்ட விவாயிகளுக்கு அழைப்பு
/
12.50 லட்சம் கிலோ பயறு கொள்முதல் செய்ய இலக்கு!: திருவள்ளூர் மாவட்ட விவாயிகளுக்கு அழைப்பு
12.50 லட்சம் கிலோ பயறு கொள்முதல் செய்ய இலக்கு!: திருவள்ளூர் மாவட்ட விவாயிகளுக்கு அழைப்பு
12.50 லட்சம் கிலோ பயறு கொள்முதல் செய்ய இலக்கு!: திருவள்ளூர் மாவட்ட விவாயிகளுக்கு அழைப்பு
ADDED : மார் 04, 2024 06:45 AM
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகள் பயறு வகைகளை பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், நடப்பாண்டில், 12.50 லட்சம் கிலோ கொள்முதல் செய்ய வேளாண் வணிகத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
பருப்பு வகை உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு விலை ஆதரவு திட்டம் அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைபயறு கொள்முதல் செய்யப்படுகிறது.
நிர்ணயம்
கடந்தாண்டு குறைந்த பட்ச விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இரண்டரை ஏக்கருக்கு, 257 கிலோ வீதம் திருவள்ளூர் மாவட்டத்தில், 8.80 லட்சம் கிலோ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், 6.75 லட்சம் கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை, 4.91 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம், 766 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அதே போல் நடப்பாண்டில், 2023- -24 ம் ஆண்டு ராபி பருவத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப்பயறு தனிப்பயிராக, 22,847 ஏக்கர் பரப்பிலும், தரிசு நிலத்தில் பயறு வகை சாகுபடி திட்டத்தின் கீழ், 2,099 ஏக்கர் பரப்பிலும் என மொத்தம், 24,947 பரப்பில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
பச்சைப்பயறு இம்மாதம் கடைசி வாரத்தில் இருந்து அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.
நடப்பாண்டில் பச்சைப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஒரு கிலோவிற்கு, 4.80 ரூபாய் உயர்த்தப்பட்டு குறைந்த பட்ச ஆதார விலை, 77.55 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடமிருந்து பச்சைபயறு கொள்முதல் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது,
மாவட்டத்தில் பயறுவகைகளை விவசாயிகள் இடையே ஊக்குவிக்கும் வகையில் தற்போது, பயறுவகைகளை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து வருகிறோம்.
பட்டா
அந்த வகையில் பச்சைப்பயறு நடப்பாண்டில், 12.50 லட்சம் கிலோ கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்குப் புத்தகம், பட்டா, சிட்டா அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் மேற்கண்ட மூன்று இடங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

