/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டாஸ்மாக்' ஊழியர்கள் காக்களூரில் ஆர்ப்பாட்டம்
/
'டாஸ்மாக்' ஊழியர்கள் காக்களூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2025 12:46 AM
திருவள்ளூரில், காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் காக்களூர் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நேற்று முதல் நடைமுறை படுத்தப்பட்டதாக, மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு, டாஸ்மாக் கடை ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து தொழிற்சங்கத்தினரும், நேற்று காலை, காக்களூரில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு, தனி ஊழியர் மற்றும் இட வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அதுவரை, கடைகளை திறக்க மாட்டோம்' என்றனர்.
இதையடுத்து, டாஸ்மாக் அலுவலர்கள், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தினர். வரும் 5ம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறும் டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, நேற்று மதியம், 12:30 மணிக்கு மேல் கடைகள் திறந்து, மதுபானம் விற்பனை நடைபெற்றது.
-------------