ADDED : நவ 02, 2026 07:21 PM

அ நிறம் | அளவு
திருவாலங்காடு: சின்னம்மாபேட்டை கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தேக்கு மரம் முறிந்து, கிராம நிர்வாக அலுவலகம் மீது விழுந்தது.
திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், அரசு பள்ளி அருகே வி.ஏ.ஓ., எனும் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலக வாயிலில், 15 ஆண்டுகள் பழமையான தேக்கு மரம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், அந்த தேக்கு மரம் முறிந்து, வி.ஏ.ஓ., அலுவலகம் சுவர் மீதும், மின்சாரம் சென்ற ஒயர் மீது விழுந்தது.
இதனால், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்சார வாரிய ஊழியர்கள், விழுந்த மரக்கிளையை அகற்றி, மின் வினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
