/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தச்சூர் இணைப்பு சாலையோரம் துர்நாற்றம் வீசும் குப்பை குவியல்
/
தச்சூர் இணைப்பு சாலையோரம் துர்நாற்றம் வீசும் குப்பை குவியல்
தச்சூர் இணைப்பு சாலையோரம் துர்நாற்றம் வீசும் குப்பை குவியல்
தச்சூர் இணைப்பு சாலையோரம் துர்நாற்றம் வீசும் குப்பை குவியல்
ADDED : மார் 01, 2024 07:46 PM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் கூட்டு சாலை பகுதியில், 250க்கும் மேற்பட்ட கடைகள் 10க்கும் மேற்பட்ட உணவகங்கள், ஐந்து திருமண மண்டபங்கள் உள்ளன. அவற்றில் தினசரி சேகரமாகும் கழிவுகளை, கடையினரும், பஞ்செட்டி ஊராட்சி நிர்வாகமும், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் குவித்து வருகின்றனர்.
தச்சூர் கூட்டு சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் திசையில் உள்ள இணைப்பு சாலையில், 500 மீட்டர் நீளத்திற்கு குப்பை குவியல்கள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், ஊராட்சி நிர்வாகம், அதை கிளறிவிட்டு, காய்ந்தவுடன் தீயிட்டு எரித்து வருவதாக சமூக ஆவர்லர்கள் தெரிவிக்கின்றனர்.
குப்பை குவியல்களால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், தேசிய நெடுஞ்சாலை பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் குப்பையை தீயிட்டு எரிப்பதால், சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் குப்பை குவித்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். உடனடியாக குப்பையை அகற்றி எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். பஞ்செட்டி ஊராட்சியில் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆவர்லர்கள் தெரிவிக்கின்றனர்.

