/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைமேடை புதுப்பிக்கும் பணி தாமதம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
/
நடைமேடை புதுப்பிக்கும் பணி தாமதம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
நடைமேடை புதுப்பிக்கும் பணி தாமதம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
நடைமேடை புதுப்பிக்கும் பணி தாமதம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
ADDED : ஜன 31, 2024 11:23 PM

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
ஆறு நடைமேடை கொண்ட இந்த ரயில் நிலையத்தில், இரண்டாவது நடைமேடையில் 'எஸ்கலேட்டர்' வசதி உள்ளது. சுரங்கப்பாதையும் கட்டப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், 28.04 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்காக, ரயில் நிலைய முன்பகுதியில் உள்ள பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும், முதலாவது நடைமேடையை அழகுபடுத்தும் வகையில், சிமென்ட் சிலாப்கள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்த முதலாவது நடைமேடையில், சென்னைக்கு செல்லும் 11 விரைவு ரயில்கள் மற்றும் ஒரு புறநகர் மின்சார விரைவு ரயில் நின்று செல்கிறது.
விரைவு ரயில்களில் பயணிப்போர், உடைக்கப்பட்ட நடைமேடையில் உள்ள சிலாப்கள் அகற்றப்படாதததால், கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயபால்ராஜ் ஆகியோர், சென்னை கோட்ட ரயில்வே மேலாளருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
முதலாவது நடைமேடை சிதிலமடைந்துள்ளதால், விரைவு ரயில்களில் பயணிப்போர், தங்களது உடைமைகளை கொண்டு செல்லவும், ரயிலில் ஏறவும் சிரமப்படுகின்றனர். விரைவு ரயில்களை, இரண்டு அல்லது மூன்றாவது நடைமேடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.