/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
/
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
தி.மு.க., நிர்வாகியுடன் தகராறு காதை கடித்து துப்பிய ஓட்டுனர்
ADDED : மார் 06, 2024 01:01 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, தண்ணீர்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் தயாளன், 60; தி.மு.க., கிளைச் செயலர். இவரது மனைவி தேவி, தண்ணீர்குளம் ஊராட்சி தலைவர்.
இங்குள்ள குறிஞ்சி சி.பி.எஸ்.சி., பள்ளி அருகே குடியிருப்புகள் பகுதியில், 'பேவர் பிளாக்' சாலை அமைக்கும் பணி, சில தினங்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மகாலிங்கம், 42, சாலை உயரமாக இருப்பதால், ஆட்டோ வர முடியாது எனவும், முறையாக அமைக்க வேண்டும் எனவும் கூறி, நேற்று முன்தினம், தயாளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மகாலிங்கம், தயாளனின் காதை கடித்து துப்பினார். தயாளனின் காது துண்டாகி கீழே விழுந்தது.
ரத்தம் வடிய,வடிய கீழே கிடந்த காதை எடுத்துக் கொண்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, தயாளன் விரைந்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துமனைக்கு சென்றும், காதை மீண்டும் பொருத்த முடியவில்லை. இதற்கு அங்கு போதிய வசதி இல்லாததால், முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்தனர். அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தயாளனை கொண்டு சென்றனர். காலம் கடந்ததால், அங்கும் தயாளின் காதை மீண்டும் சேர்க்க முடியாது என, டாக்டர்கள் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, தயாளன் மகன் தியாகுசந்தர் அளித்த புகார்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மகாலிங்கத்தை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மகாலிங்கம் தந்தை மாரி என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

