/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜாத்திரை விழா துவக்கம் வரும் 29ல் அம்மன் வீதியுலா
/
ஜாத்திரை விழா துவக்கம் வரும் 29ல் அம்மன் வீதியுலா
ADDED : ஜூலை 22, 2025 09:22 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் ஜாத்திரை விழா துவங்கியது.
திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஜாத்திரை விழா நேற்று காலை கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கங்கையம்மன் மற்றும் சக்தியம்மன் ஆகிய கோவில்களில், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்றனர்.
வரும் 28ம் தேதி பூங்கரகம் ஊர்வலமும், வரும் 29ம் தேதி ஜாத்திரை விழா மற்றும் கங்கையம்மன் வீதியுலாவும் நடக்கிறது. இரவு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாமண்டூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.