/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் சேட்டை 'ரீல்ஸ்' மோகத்தால் எதிர்காலம் கேள்விக்குறி
/
பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் சேட்டை 'ரீல்ஸ்' மோகத்தால் எதிர்காலம் கேள்விக்குறி
பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் சேட்டை 'ரீல்ஸ்' மோகத்தால் எதிர்காலம் கேள்விக்குறி
பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் சேட்டை 'ரீல்ஸ்' மோகத்தால் எதிர்காலம் கேள்விக்குறி
ADDED : செப் 22, 2024 01:58 AM

பூந்தமல்லி:சென்னை அருகே பூந்தமல்லியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பூந்தமல்லி, நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், மாங்காடு, குன்றத்துார் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் இருந்து, 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இவர்கள், அரசு பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
பூந்தமல்லியில் இருந்து மாங்காடு, குன்றத்துார் வழியாக தாம்பரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள், தினமும் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள், போலீசாரும் மாணவர்களை கண்டிப்பதே இல்லை. இதனால், பேருந்தை தட்டி தாளம் போட்டும், படிக்கட்டில் தொங்கியும், படிக்கட்டில் தொங்கியவாறு கால்களை தரையில் தேய்த்தும் அட்டகாசம் செய்வது, தினமும் வாடிக்கையாக நடக்கிறது.
இந்நிலையில், பூந்தமல்லி- - தாம்பரம் நோக்கிச் செல்லும் இரு வேறு அரசு பேருந்துகளின் கூரைகளில் ஏறி அமர்ந்தும், பேருந்து ஜன்னல்களில் தொங்கியபடியும் வீடியோ எடுத்த மாணவர்கள், கானா பாடல்களுடன் அதை இணைத்து,'வாட்ஸாப் ஸ்டேடஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது, வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
குன்றத்துாரில் கடந்தாண்டு நவம்பரில், அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணித்த ப்ளஸ் 1 மாணவர் தவறி விழுந்து, அதே பேருந்து ஏறி இரண்டு கால்களும் நசுங்கின. பின், இரு கால்களும் அகற்றப்பட்டன.
இந்த விபத்தால் அந்த மாணவரின் எதிர்காலமே கேள்விக்குறியானது. ஆபத்தை உணராமல், சில மாணவர்கள் இதுபோல் நடந்து கொள்கின்றனர்.
சில மாணவர்களின் இதுபோன்ற செயலால், அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.