/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எங்கப்பா வாங்கி தந்த குதிரை வெளிவட்ட சாலையில் அட்டகாசம்
/
எங்கப்பா வாங்கி தந்த குதிரை வெளிவட்ட சாலையில் அட்டகாசம்
எங்கப்பா வாங்கி தந்த குதிரை வெளிவட்ட சாலையில் அட்டகாசம்
எங்கப்பா வாங்கி தந்த குதிரை வெளிவட்ட சாலையில் அட்டகாசம்
ADDED : செப் 14, 2025 11:32 PM

வண்டலுார் ;வண்டலுாரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையில் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் திரிவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகன ஓட்டிகள் அம்பத்துார், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாக செல்ல, வண்டலுார் - மீஞ்சூர் இடையேயான, 62 கி.மீ., வெளிவட்ட சாலை பயன்படுகிறது.
இந்த சாலையில் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே அங்குமிங்கும் சாவகாசமாக நடமாடுவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக, வெளிவட்ட சாலையில், குதிரைகள் அதிகம் உலா வருகின்றன. இக்குதிரைகளை யார் வளர்க்கின்றனர் என தெரியவில்லை.
உணவு தேவைக்காக, வெளிவட்ட சாலையின் மையத் தடுப்பில் வளர்ந்துள்ள செடி, கொடி, புற்களை மேயும் இக்குதிரைகள், சாலையின் குறுக்கே அங்குமிங்கும் ஓடித் திரிகின்றன. இரவு நேரத்திலும் குதிரைகள் சாலையில் நடமாடுவது அதிகரித்துள்ளது.
வெளிவட்ட சாலையில் வாகனங்கள் சராசரியாக 60 கி.மீ., வேகத்தில் செல்கின்றன.
குதிரைகள் வாகனங்கள் மீது மோதுவதாலோ அல்லது வாகனங்கள் குதிரைகள் மீது மோதுவதாலோ, பெரும் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, குதிரைகளை பிடித்து, வண்டலுார் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க வேண்டும். குதிரைகள் சாலையில் சுற்றி திரிவதை பார்க்கும் போது, பூ பூவா பூத்திருக்கு திரைப்படத்தில், ' எங்கப்பா வாங்கி தந்த குதிரை, அதுல நானும் போக மதுரை என்ற பாடல் ஞாபத்திற்கு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.