/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அணைக்கட்டில் பார்வையாளர் இரும்புமாடம் சேதம் ஆலாடு, லட்சுமிபுரத்தில் சீரமைக்க எதிர்பார்ப்பு

ADDED : டிச 27, 2024 01:42 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் - ஆலாடு கிராமங்களுக்கு இடையே, பயணிக்கும் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, அக்டோபர் முதல், ஆரணி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இருக்கிறது. அணைக்கட்டு நிரம்பி உபரிநீர் வெளியேறி ரெட்டிப்பாளையம் தடுப்பணையை நோக்கி செல்கிறது.
லட்சுமிபுரம் மற்றும் ஆலாடு பகுதிகளில் அணைக்கட்டு ஷட்டர் அருகே, நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பார்வையிடுவதற்காக இரும்பு மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.
பராமரிப்பு இல்லாததால், தற்போது, இவை துருப்பிடித்து ஓட்டை உடைசல்களுடன் சேதம் அடைந்து இருக்கின்றன.
அணைக்கட்டு நிரம்பி வழிவதை பார்க்கவும், மீன்பிடிக்கவும் இளைஞர் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் அங்கு வருகின்றனர்.
அவர்கள் சேதம் அடைந்துள்ள மாடத்தில் நின்று, 'செல்பி' எடுப்பது, அணைக்கட்டை ரசிப்பது, மீன்பிடிப்பது என உள்ளனர்.
அதிகப்படியான நபர்கள் சேதம் அடைந்த இரும்பு மாடங்கள் மீது நிற்கும்போது, அவை பாரம் தாங்காமல், உடையும் நிலை உள்ளது. இதனால், பார்வையாளர்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், நீர்வளத் துறையினரும் அணைக்கட்டில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள செல்லும்போது சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
அதை தவிர்க்க, சேதமடைந்து பகுதியை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.