/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வழிகாட்டி பலகை இல்லாததால் 6 கி.மீ., சுற்றி செல்லும் அவலம்
/
வழிகாட்டி பலகை இல்லாததால் 6 கி.மீ., சுற்றி செல்லும் அவலம்
வழிகாட்டி பலகை இல்லாததால் 6 கி.மீ., சுற்றி செல்லும் அவலம்
வழிகாட்டி பலகை இல்லாததால் 6 கி.மீ., சுற்றி செல்லும் அவலம்
ADDED : ஜூன் 02, 2025 03:41 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த ஆத்துார் பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பெரியபாளையம் செல்வதற்கான சாலை பிரிந்து செல்கிறது.
இப்பகுதியில், எந்தவொரு திசைகாட்டி பலகையும் வைக்கப்படவில்லை. சென்னையில் இருந்து சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்து, பெரியபாளையம் செல்வோர், ஆத்துார் பகுதியில் இடதுபுறமாக உள்ள சாலையில் பயணிக்க வேண்டும்.
இதற்கான திசைகாட்டி இல்லாத நிலையில், வாகன ஓட்டிகள் நேராக பயணித்து, 3 கி.மீ., துாரம் சென்ற பின்பே, வழிதவறி வந்ததை அறிந்து கொள்கின்றனர்.
பின், அழிஞ்சிவாக்கம் இணைப்பு சாலையில் பயணித்து, சுரங்கப்பாதை வழியாக வலதுபுறம் திரும்பி, மீண்டும் ஜனப்பன்சத்திரம் வந்து, அங்கிருந்து பெரியபாளையம் சாலையை அடைகின்றனர்.
இதனால், வாகன ஓட்டிகள், 6 கி.மீ., சுற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், இதுபோன்ற சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், பெரியபாளையம் சாலைக்கான வழிகாட்டி பலகைககளை பெரிய அளவில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.