/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதராக மாறிய நீர்வரத்து கால்வாய் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
புதராக மாறிய நீர்வரத்து கால்வாய் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
புதராக மாறிய நீர்வரத்து கால்வாய் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
புதராக மாறிய நீர்வரத்து கால்வாய் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : நவ 15, 2024 01:46 AM

ஊத்துக்கோட்டை:ஆரணி ஆறு ஆந்திராவில் உருவாகி, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி வழியே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைக்கிறது.
அங்கிருந்து, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாக்குளம், கல்பட்டு, பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகள் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட் எனும் இடத்தில், வங்கக் கடலில் கலக்கிறது.
இதில் சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து, தமிழக பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல கால்வாய் உள்ளது. சுருட்டப்பள்ளியில் இருந்து ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூர், லட்சிவாக்கம், பாலவாக்கம், முக்கரம்பாக்கம் வரை, 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது.
இதில் பாலவாக்கம் ஏரியில் தண்ணீர் நிரம்பி, லட்சிவாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் முழுதும் செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதர்சூழ்ந்த நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.