/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விட்டு விட்டு வரும் மின்சப்ளை மணவூர் மக்கள் கடும் அவதி
/
விட்டு விட்டு வரும் மின்சப்ளை மணவூர் மக்கள் கடும் அவதி
விட்டு விட்டு வரும் மின்சப்ளை மணவூர் மக்கள் கடும் அவதி
விட்டு விட்டு வரும் மின்சப்ளை மணவூர் மக்கள் கடும் அவதி
ADDED : மே 15, 2025 06:55 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இப்பகுதியில் கடந்த 12ம் தேதி சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள், செடிகள் சாய்ந்தன. அன்று இரவே திருவாலங்காடு மின் ஊழியர்கள் சீரமைத்து மின்சாரம் வழங்கினர்.
இந்நிலையில் அன்று முதல் மணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கு மூர்த்தி நகர் மற்றும் ரயில் நிலைய சாலை பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் 'டிரிப்' ஆவதால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும் ஒருமணி நேரத்திற்கு 20 நிமிடம் விட்டு விட்டு மின்சாரம் வழங்கப்படுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சங்குமூர்த்தி நகர் வாசிகள் கூறியதாவது:
இரவு பகல் பாராமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள் துாங்க முடியாமல் இரவில் முதியவர்கள் குழந்தைகள் வேதனையை அனுபவித்து வருகிறோம். திருமழிசை கோட்ட மின்துறை பொறியாளரிடம் கூட புகார் தெரிவித்து விட்டோம் விடிவு கிடைக்கவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ' சம்பந்தப்பட்ட பகுதியில் மின் ஊழியர்கள் நான்கு நாட்களாக பார்வையிட்டு வருகின்றனர். டிரிப் ஆகும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருசில நாட்களில் சரி செய்யப்படும்' என்றார்.

