/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகாரிகள் வர தாமதம் மனு அளிக்க காத்திருந்த மக்கள்
/
அதிகாரிகள் வர தாமதம் மனு அளிக்க காத்திருந்த மக்கள்
அதிகாரிகள் வர தாமதம் மனு அளிக்க காத்திருந்த மக்கள்
அதிகாரிகள் வர தாமதம் மனு அளிக்க காத்திருந்த மக்கள்
ADDED : பிப் 17, 2025 11:03 PM

திருவள்ளூர் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வர தாமதமானதால், மனு அளிக்க வந்தவர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க காலை முதல், காத்திருந்தனர். கலெக்டர் நேற்று வேறொரு நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றதால், காலை 10:00 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம், துவங்கவில்லை.
இதனால், மனு அளிக்க வந்தவர்கள் கூட்டரங்கின் வெளியில் நீண்ட நேரம் காத்திருந்தனர். சிலர், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தும், மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு, அவர்களை அனுப்பி வைக்க துவங்கினர். பின், காலை 11:15 மணியளவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வந்து மனுக்களை பெற துவங்கினார். அதன் பின், கலெக்டர் பிரதாப் பங்கேற்றார்.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 156, சமூக பாதுகாப்பு திட்டம் 87, வேலைவாய்ப்பு வேண்டி 54, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி 98, இதர துறை 181 என, மொத்தம் 576 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நான்கு பேருக்கு 36,000 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன், சத்தியபிரசாத் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

