/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோளூரில் பாசி படிந்து வீணாகும் குளம் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் தவிப்பு
/
கோளூரில் பாசி படிந்து வீணாகும் குளம் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் தவிப்பு
கோளூரில் பாசி படிந்து வீணாகும் குளம் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் தவிப்பு
கோளூரில் பாசி படிந்து வீணாகும் குளம் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் தவிப்பு
ADDED : ஏப் 28, 2025 11:31 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், மூன்று ஏக்கர் பரப்பில் ஊர் பொதுக்குளம் அமைந்து உள்ளது. மழைக்காலங்களில் இதில் தேங்கும் தண்ணீர், கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்கும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வந்தது.
இந்நிலையில் குளம் பராமரிப்பு இல்லாமல், பாசி படிந்துள்ளதால் நான்கு ஆண்டுகளாக அதில் உள்ள தண்ணீரை கிராமவாசிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
குளம் முழுதும், பாசி படர்ந்துள்ளது. பாசியால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கால்நடைகள் தண்ணீரை குடிக்க முடியாமல் தவிக்கின்றன.
இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்புத்தன்மை கொண்டதாகும். வெளியிடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையாகவே இருக்கிறது.
குளத்தில் தேங்கும் தண்ணீரை வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தோம். தற்போது குளம் முழுதும் பாசிபடர்ந்தும், கொடிகள் சூழ்ந்தும் இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை.
கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கால்நடைகளின் குடிநீர் தேவையை கருதி, உடனடியாக குளத்தை முழுமையாக சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.