/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4 வழி சாலை பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களில் விழுந்தது 'பொத்தல்'
/
4 வழி சாலை பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களில் விழுந்தது 'பொத்தல்'
4 வழி சாலை பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களில் விழுந்தது 'பொத்தல்'
4 வழி சாலை பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களில் விழுந்தது 'பொத்தல்'
ADDED : ஆக 10, 2025 12:45 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் - அரக்கோணம் நான்கு வழிச்சாலை, 68 கோடி ரூபாயில், கடந்த ஏப்., மாதம் அமைக்கப்பட்டது. இச்சாலையில், திருவாலங்காடு ரவுண்டானா பகுதியில் பொத்தல் விழுந்துள்ளதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது, அரக்கோணம் - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., துாரம் உடையது.
திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து, அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலையை, முதற்கட்டமாக நான்கு வழியாக மாற்ற, கடந்தாண்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதே ஆண்டு ஒப்புதல் கிடைத்த நிலையில், முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ், 68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஜன., மாதம் துவங்கிய பணி, கடந்த ஏப்., மாதத்தில் முடிந்தது.
சாலையில் மழைநீர் தேங்குவதாகவும், கிராமங்களில் உள்ள இணைப்பு சாலையில் உயர்கோபுர விளக்கு அமைக்கப்படவில்லை எனவும், வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், திருவாலங்காடு ரவுண்டானா பகுதியில், திருவள்ளூர் செல்லும் சாலையில் பொத்தல் விழுந்துள்ளது. இதனால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியபோது, '68 கோடி ரூபாயில் சாலை அமைத்து, பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில், சாலையில் பொத்தல் விழுந்துள்ளது. இதனால், சாலையின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.