/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்
/
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்
கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்
ADDED : அக் 27, 2025 01:14 AM

திருத்தணி: விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருத்தணி ஒன்றியம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 50. இவர், நேற்று காலை தனக்கு சொந்தமான பசுமாட்டை, தெக்களூர் ஏரிக்கரை அருகே உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த விவசாய கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது. பசு மாடு கத்தும் சத்தம் கேட்டதும், கஜேந்திரன் கிணற்று பகுதிக்கு விரைந்து சென்றார்.
கிணற்றில் இருந்து ஏற முடியாமல் மாடு தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து, திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மாட்டிற்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விவசாய தரைமட்ட கிணற்றில், நான்கு மாதங்களில் மூன்று மாடுகள் தவறி விழுந்து உயிருடன் மீட்டுள்ளதாக, தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தெரிவித்தார்.

