/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே தீர்வு
/
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே தீர்வு
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே தீர்வு
பெரியபாளையத்தில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே தீர்வு
ADDED : நவ 21, 2025 03:46 AM

ஊத்துக்கோட்டை: நவ. 21-: சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே, பெரியபாளையத்தில் நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று பெரிய பாளையம் பவானியம்மன் கோவில்.
பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்வர்.
இங்குள்ள பேருந்து நிலையம் குறுகலான இடத்தில் உள்ளது. பேருந்து நிலையம் எதிரே சாலையில் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
மேலும், விழுப்புரம் கோட்டம் மற்றும் மாநகர பேருந்துகள், 100க்கும் மேற்பட்டவை வருவதால், இடநெருக்கடி ஏற்படுகிறது.
பேருந்துகள் சாலையில் நிறுத்துவதால், நெரிசல் ஏற்படுகிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் உள்ளதால், போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.
பேருந்து நிலையத்தை கடந்து வரும் வளைவில் வாகனங்கள் திரும்ப முடியாத நிலை உள்ளது. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெரியபாளையத்தில் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

