/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் மயானத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
/
மின் மயானத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
மின் மயானத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
மின் மயானத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
ADDED : மே 30, 2024 12:30 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் இறந்தால், ஆரணி ஆற்றின் கரையில் உள்ள மயானங்களில் இறுதி சடங்கு செய்வர்.
மாநிலம் முழுதும் அரசு சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின் மயானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.
மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயகுமார் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.
இறுதியில், ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணா குடியிருப்பு பின்புறம் அரசு நிலம் உள்ளது. இதில், மின் மயானம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான இடத்தை வருவாய்த் துறை வாயிலாக பெறுவதற்கு, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.