/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் இணைப்பு எண் வரிசைப்படுத்தும் பணி...தீவிரம் கட்டணம் செலுத்தாதவரை கண்டுபிடிப்பது சுலபம்
/
மின் இணைப்பு எண் வரிசைப்படுத்தும் பணி...தீவிரம் கட்டணம் செலுத்தாதவரை கண்டுபிடிப்பது சுலபம்
மின் இணைப்பு எண் வரிசைப்படுத்தும் பணி...தீவிரம் கட்டணம் செலுத்தாதவரை கண்டுபிடிப்பது சுலபம்
மின் இணைப்பு எண் வரிசைப்படுத்தும் பணி...தீவிரம் கட்டணம் செலுத்தாதவரை கண்டுபிடிப்பது சுலபம்
ADDED : ஜூலை 28, 2025 10:46 PM

கடம்பத்துார் : தமிழகம் முழுதும் அரசு உத்தரவுப்படி, மின் இணைப்பு எண்கள் வரிசைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், மின்சாரம் சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் மின்கட்டணம் செலுத்தாதவர்களை கண்டுபிடித்து தீர்வு காண்பது சுலபம் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின் இணைப்பு எண் என்பது, மின்வாரியத்தால் வழங்கப்படும் இணைப்பை குறிக்கும் அடையாள எண். இது, மின்வாரியத்தில் நுகர்வோர் பதிவு செய்யப்பட்டதை குறிக்கிறது.
இந்த எண்ணை பயன்படுத்தி மின் பயன்பாடு, கட்டணம் செலுத்துதல் மற்றும் மின்வாரிய சேவைகள் தொடர்பான விபரங்களை அணுகி பயன்பெறலம்.
மின் இணைப்பு வேண்டி நுகர்வோர் விண்ணப்பிக்கும் போது, ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்பு எண்ணுக்கு அடுத்த எண் வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது.
இதனால், மின் நுகர்வோர் எண், ஒரு பகுதியில் வரிசையாக இல்லாமல், வெவ்வேறு பகுதியில் இருந்தது.
இதையடுத்து, மின் நுகர்வோர் ஏதேனும் புகார் அளித்தால், அந்த வீட்டை கண்டுபிடிப்பதில் மின்வாரிய அலுவலர்களுக்கு கூடுதல் நேரம் ஏற்பட்டு, மின்சார குறைபாட்டை சீரமைப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.
மேலும், மின்கட்டணம் செலுத்தாத வீட்டை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இருந்து வந்தது. இதனால், மின்வாரிய ஊழியர்களும், மின் நுகர்வோரும் கடும் சிரமப்பட்டனர்.
இப்பிரச்னையை தீர்க்க மின்வாரிய அதிகாரிகள் கலந்தாலோசித்து, தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகளிடம், மின் விநியோகம் செய்யும் ஏரியா வாரியாக நுகர்வோர் எண்ணை வரிசைப்படுத்தினால் தீர்வு கிடைக்குமென அறிவுறுத்தினர்.
தற்போது, ஏரியா வாரியாக மின்நுகர்வோர் எண்ணை மாற்றம் செய்து, வரிசைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
எண்கள் இடைவெளிக்கு தீர்வு தற்போது, மின் இணைப்பு எண்ணை, மின்வாரிய அலுவலர்கள் மாற்றி வருவது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உதாரணமாக, எனக்கு மூன்று மின் நுகர்வோர் இணைப்பு உள்ளது. மூன்று எண்களும், 200 எண்கள் இடைவெளியில் இருந்தன. தற்போது, மின் நுகர்வோர் எண் மாற்றம் செய்யப்பட்ட பின், அடுத்தடுத்து வரிசையாக உள்ளது. இதனால், மின்சார பிரச்னைகள் குறித்து புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். - எம்.மாரியப்பன், திருமழிசை.
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை பழைய மின்நுகர்வார் எண் மூலம் மின்சாரம் குறித்த புகார் வரும்போது, அப்பகுதியை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டோம். தற்போது, புதிய மின் நுகர்வோர் எண் மாற்றம் செய்யப்பட்ட பின், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் . - மின்வாரிய ஊழியர், திருமழிசை.
மின் நுகர்வோர் எண் விரைவில் மாற்றப்படும் தற்போது வளர்ந்து வரும் திருமழிசை, ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல நகரங்களில் மின் நுகர்வோர் எண்கள் மாற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளிலும், மின் நுகர்வோர் எண் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - மின்வாரிய அதிகாரி, திருநின்றவூர்.

