/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி நாய் குட்டியுடன் விளையாடியபோது நிகழ்ந்த சோகம்

ADDED : செப் 30, 2024 05:53 AM

சென்னை : கே.கே.நகர், ஜவஹர்லால் நேரு சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது.
சாலையின் இருபுறம் உள்ள வடிகாலை இணைக்க, சாலையின் குறுக்கே கல்வெர்ட்டு அமைக்கும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்காக, சாலையின் குறுக்கே 30 மீ., நீளத்திற்கு கல்வெர்ட்டு அமைக்க, இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. கே.கே.நகர், அம்பேத்கர் குடியிருப்பு அருகே 10 அடி அகலம், 10 அடி நீளம் மற்றும் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
விபத்துகள் எதுவும் நடக்காமல் இருக்க, இந்த பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, பச்சை நிற துணி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, அம்பேத்கர் நகர் குடிசை பகுதியைச் சேர்ந்த, வாகன 'டிங்கரிங்' தொழிலாளியான அய்யப்பன், 35, என்பவர் மது போதையில், நாய் குட்டியுடன், மழைநீர் வடிகால் பள்ளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, பள்ளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது சாய்ந்தார். எழும்போது நிலை தடுமாறி, வடிகால் பள்ளத்தில் குப்புற விழுந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தோர், அரை மணி நேரம் போராடி அவரை மீட்டனர். வடிகால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, கழிவுநீராக இருந்ததால், அய்யப்பனை துாக்கும்போது, அவரது மூக்கில் இருந்து நுரை வடிந்தது.
இதையடுத்து கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் உடனடியாக அவரை அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், அவரது சடலத்தை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர்.