/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வழக்கில் சிக்கிய வாகனங்கள் புதர்மண்டி வீணாகும் அவலம்
/
வழக்கில் சிக்கிய வாகனங்கள் புதர்மண்டி வீணாகும் அவலம்
வழக்கில் சிக்கிய வாகனங்கள் புதர்மண்டி வீணாகும் அவலம்
வழக்கில் சிக்கிய வாகனங்கள் புதர்மண்டி வீணாகும் அவலம்
ADDED : அக் 22, 2024 07:31 AM

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில், பூந்த மல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், வாடகை கட்ட டத்தில் இட நெருக்கடியுடன் இயங்கி வருகிறது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்த மல்லி, நசரத்பேட்டை, மாங்காடு, போரூர்,திருவேற்காடு, ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி,திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, திருமுல்லை வாயில், பட்டாபிராம், செவ்வாய்ப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய காவல் நிலைய எல்லையில் நடைபெறும் சாலை விபத்து குறித்த வழக்குகள், இந்த காவல் நிலையத்தில்விசாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மேற்கண்ட இடங்களில் விபத்தில் சிக்கி, வழக்கு பதிவு செய்யப்பட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்கு, போக்கு வரத்து புலனாய்வு காவல் நிலையத்தில்இடமில்லை.
இதனால், வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆவடி- - கரையான்சாவடி சாலையிலும், பூந்தமல்லி - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமும் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த வாகனங்கள்மழை, வெயிலில்காய்ந்தும், புதர் மண்டியும் வீணாகி வருகின்றன.
எனவே, வழக்கு விசாரணையை முடித்து, வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது அடையாளம் காணப்படாத வாகனங்களை ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.