/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர் நிறைந்த சிட்ரபாக்கம் அணைக்கட்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது

ADDED : ஏப் 17, 2025 01:34 AM

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆந்திராவில், 65.20 கி.மீ., பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியே சிட்ரபாக்கம், பனப்பாக்கம், பெரியபாளையம், ஏ.என்.குப்பம் வழியாக, 66.40 கி.மீ., சென்று, பழவேற்காடு அருகே உள்ள புலிக்காட் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.
இந்த இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் உள்ளன. கோடை காலங்களில் இந்த நீர்நிலைகள் வறண்டு காணப்படும். கடந்தாண்டு இறுதியில் பெய்த பலத்த மழையால், தற்போது, பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு நிரம்பி உள்ளதால், சுற்றியுள்ள 5 கி.மீ.,க்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படும்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர், சிட்ரபாக்கம் அணைக்கட்டை சுற்றியுள்ள இடங்களில் ஆழ்துளை கிணறு வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு வராது என, பகுதிவாசிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.