/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவிந்த பெண்கள்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குவிந்த பெண்கள்
UPDATED : ஆக 01, 2025 01:07 AM
ADDED : ஆக 01, 2025 01:05 AM

திருத்தணி:திருத்தணியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், 850 மேற்பட்ட பெண்கள் விண்ணப்பம் கொடுத்தனர்.
![]() |
திருத்தணி நகராட்சி, பலிஜவாரி திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் திருத்தணி தி.மு.க.,-- எம்.எல்.ஏ., சந்திரன், நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில், 850க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் உரிமைத் தொகை, முதியோர் தொகை, விதவை சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா உட்பட துறை அலுவலர்களிடம் விண்ணப்பம் வழங்கினர்.
புதிய ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு, வாரிசு போன்ற சான்றுகள் என, 30க்கும் மேற்பட்டோருக்கு முகாமிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

