/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த 93 குளம் வெட்டும் பணி விறுவிறு
/
நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த 93 குளம் வெட்டும் பணி விறுவிறு
நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த 93 குளம் வெட்டும் பணி விறுவிறு
நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த 93 குளம் வெட்டும் பணி விறுவிறு
ADDED : நவ 07, 2024 01:08 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில், 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்க்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், அரசு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2024 - 25ம் ஆண்டில், நுாறு பணியாளர்கள் வாயிலாக குளம் வெட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, 27 ஊராட்சிகளில், 93 குளங்கள் வெட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு குளத்திற்கும், குறைந்தபட்சம் 5 - 20 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த குளங்கள் ஊராட்சிக்கு சொந்தமான இடம் அல்லது வருவாய் துறையில் உள்ள புறம்போக்கு நிலத்தில், வருவாய் துறை அனுமதியுடன் குளம் வெட்டப்படுகிறது.
இதுகுறித்து, திருத்தணி ஒன்றிய அதிகாரி கூறியதாவது:
திருத்தணி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், விவசாய கிணறுகளில் நிலத்தடி மட்டத்தை உயர்த்தவும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம், 20 அடி நீளம், 20 அடி அகலம், 3 மீட்டர் ஆழத்திற்கு குளம் வெட்டப்படுகிறது.
அதிகபட்சமாக 50 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட குளங்கள் வெட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், 93 குளங்கள் வெட்டும் பணிகள் துவங்கின. தற்போது, 7 குளங்கள் வெட்டும் பணிகள் முடிந்துள்ளன.
மீதமுள்ள குளங்கள் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள், 93 குளங்கள் வெட்டும் பணி நிறைவு பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.