sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3 ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி...முடக்கம்!:நான்கு ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி

/

3 ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி...முடக்கம்!:நான்கு ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி

3 ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி...முடக்கம்!:நான்கு ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி

3 ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி...முடக்கம்!:நான்கு ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி


ADDED : பிப் 11, 2025 08:02 PM

Google News

ADDED : பிப் 11, 2025 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:மீஞ்சூர் அருகே, மூன்று ஏரிகளை இணைத்து, 414 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் உருவாக்குவதற்கான திட்டம், நான்கு ஆண்டுகளாக முடங்கி கிடப்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆய்வு பணியை துவக்கி, அடுத்தக்கட்ட வேளையில் துவங்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, வாயலுார் கிராமத்தில், 172 ஏக்கர் பரப்பில் பெரியதாமரை ஏரி, 210 ஏக்கர் பரப்பில் மாமனிக்கால் ஏரி ஆகியவை அமைந்து உள்ளன. இந்த இரு ஏரிகளுக்கு இடையே, 80 ஏக்கர் பரப்பில் தனியார் விவசாய நிலங்கள் உள்ளன. அதேபோல, பெரியதாமரை ஏரியினை ஒட்டி, 32 ஏக்கர் பரப்பில் சின்னதாமரை ஏரி ஒன்றும் உள்ளது.

மேற்கண்ட மூன்று ஏரிகளிலும் தேங்கும் தண்ணீர் சுற்றியுள்ள, திருவெள்ளவாயல், செங்கழனீர்மேடு, ஊரணம்பேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்கின்றன.

மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், விவசாயிகள் ஏரிகளில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.

இங்குள்ள கிராமங்களின் குடிநீர் தேவைக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 10 - 12 கி.மீ., தொலைவில் சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வந்து வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிலத்தடி நீரை பாதுகாத்திடவும், ஏரிகளில் கூடுதல் தண்ணீரை சேமித்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையிலும், மேற்கண்ட பெரியதாமரை, சின்னதாமரை, மாமனிக்கால் ஆகிய மூன்று ஏரிகளையும் இணைத்து, 414 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் உருவாக்க திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக, 2021, ஜூன் மாதம், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறு சீரமைப்பு கழகத்தின் சார்பில் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, உடனடியாக பணிகள் துவங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

திட்டம் அறிவிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அதற்கான எந்தவொரு பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.

பெரியதாமரை - மாமனிக்கால் ஏரிகள் இணைத்து, நீர்த்தேக்கமாக மாற்றும் திட்டம் அறிவிப்புடன் இருப்பதால், கிராமவாசிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்திற்கு இந்த ஆண்டாவது விமோசனம் கிடைக்குமா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாவது:

பெரியதாமரை ஏரி, சின்னதாமரை மற்றும் மாமனிக்கால் ஏரி ஆகிய மூன்று ஏரிகளின் உபரிநீர், பகிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது. மூன்று ஏரிகளை இணைப்பதன் வாயிலாக பக்கிம்காம் கால்வாய்க்கு செல்லும் மழைநீரின் ஒரு பகுதியை சேமிக்க முடியும். இது தற்போது தேக்கி வைக்கப்பதைவிட, 10 மடங்கு கூடுதலாக சேமிக்க முடியும். ஏரிகளுக்கு மழைநீர் வருவதற்கான வரத்துக் கால்வாய் கட்டமைப்பு வாய்ப்புகளும் உள்ளன.

இதன் வாயிலாக சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் தேவையை எளிதாக தீர்க்க முடியும். விவசாயமும் தடையின்றி மேற்கொள்ள வாய்ப்பு உருவாகும்.

ஊரணம்பேடில் அமைந்து வரும் எண்ணுார் அனல் மின்நிலையம், அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்டவைகளால் எதிர்காலத்தில் வளர்ச்சியடைந்த பகுதிகளாக இப்பகுதியில் உள்ள கிராமங்கள் மாறும். புதிய தொழில் நிறுவனங்கள், புதிய குடியிருப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இதுபோன்ற நீர்தேக்க திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வரவேண்டும்.

அறிவிப்புடன் முடங்கி கிடக்கும் ஏரிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது:

பெரியதாமரை - மாமனிக்கால் ஏரிகள் இணைத்து, நீர்த்தேக்கமாக மாற்றுவது தொடர்பான, முன்மொழிவு அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. இதில், பெரியதாமரை - மாமனிக்கால் ஏரிகளுக்கு இடையில் தனியார் விவசாய நிலங்கள் உள்ளன. அவற்றை கையப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எதிர்கால குடிநீர் தேவையை கருதியே புதிய நீர்த்தேக்கம் உருவாக்க அரசு திட்டமிடுகிறது. ஏரிகள் இணைத்து நீர்த்தேக்கமாக மாற்றும்போது நிச்சயம், சுற்றியுள்ள கிராமங்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.

இந்த ஏரிகளில் ஒரு டி.எம்.சி., வரை தண்ணீரை சேமித்து வைக்க வாயப்பு உள்ளது. விரைவில் அதற்கான திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மீஞ்சூர் - திருபாலைவனம் சாலை


திருவெள்ளவாயல்திருவெள்ளவாயல்செங்கழினீர்மேடு - ஊரணம்பேடு சாலைராமநாதபுரம் பெரியதாமரை ஏரி சின்னதாமரை ஏரி தனியார் நிலங்கள் மாமனிக்கால் ஏரிவாயலுார் சாலை








      Dinamalar
      Follow us