/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடியங்காடு மகளிர் குழு கட்டட தளத்தில் கான்கிரீட் பெயர்ந்து வலுவிழக்கும் அபாயம்

ADDED : பிப் 05, 2025 02:19 AM

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவே பேருந்து நிலையமும், அதை ஒட்டி நூலகம், அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அரசு மாணவர் விடுதி எதிரே, கிராம நிர்வாக அலுவலகமும் அதையொட்டி மகளிர் சுயஉதவிக் குழு கட்டடமும் உள்ளன.
மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால் அதன் தளம் வலுவிழந்து கான்கிரீட் பெயர்ந்து உருக்குலைந்து வருகிறது.
இந்த கட்டட வளாகத்தை கடந்துதான் அரசு மாணவர் விடுதிக்கு மாணவர்கள் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.