/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடை சிரமத்தில் திருமழிசை பகுதிவாசிகள்

ADDED : டிச 07, 2024 02:23 AM

திருமழிசை,திருமழிசை பேரூராட்சியில் சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வரும் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி திருவள்ளூர், திருத்தணி மார்க்கமாக சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கடந்த சில தினங்களாக மழை பெய்த நிலையில் மழைநீர் வெளியே கால்வாய் இல்லாததால் பயணியர் நிழற்குடை பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.
மேலும் அருகிலுள்ள வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீருடன் தேங்கி கழிவுநீர் குளமாக மாறியுள்ளது.
இந்த கழிவுநீரில் ஏற்படும் துர்நாற்றத்தால் பேரூந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.