/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரு/பெரியபாளையம் பவானியம்மன் திருவீதி உலா படம் மட்டும்
/
திரு/பெரியபாளையம் பவானியம்மன் திருவீதி உலா படம் மட்டும்
திரு/பெரியபாளையம் பவானியம்மன் திருவீதி உலா படம் மட்டும்
திரு/பெரியபாளையம் பவானியம்மன் திருவீதி உலா படம் மட்டும்
ADDED : செப் 02, 2025 12:30 AM

ஊத்துக்கோட்டை, ஆடி மாத விழாவை ஒட்டி, பவானியம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், பெரியபாளையம், பவானியம்மன் கோவில் ஒன்று. பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் திருவீதி உலா நடைபெறும்.
நேற்று முன்தினம், 7வது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பொங்கல் வைத்தல், ஆடு, கோழி வழங்குதல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
★