/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவலுடன் நிறைவடைந்த திருத்தணி ஒன்றிய கூட்டம்
/
மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவலுடன் நிறைவடைந்த திருத்தணி ஒன்றிய கூட்டம்
மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவலுடன் நிறைவடைந்த திருத்தணி ஒன்றிய கூட்டம்
மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவலுடன் நிறைவடைந்த திருத்தணி ஒன்றிய கூட்டம்
ADDED : ஜன 04, 2025 01:31 AM

திருத்தணி:தமிழகத்தில் 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் 2020 ஜன.5ம் தேதி பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம் நாளை 5ம் தேதி நிறைவடைகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்களின் நிறைவு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய குழுத் தலைவர் தங்கதனம் தலைமையில் நேற்று காலை நடந்தது.
துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் பதவி முடிந்து நிறைவு கூட்டம் என்பதால், ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் ஏற்பாடில், 12 கவுன்சிலர்களுக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்பு, புத்தாடைகள் வழங்கப்பட்டன.
பெண் கவுன்சிலர்களுக்கு பட்டுப்புடவையும், ஆண்களுக்கு பட்டு வேட்டி, சட்டையும் வழங்கப்பட்டது.
தவிர ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மதியம், 2:00 மணியளவில், அலுவலக வளாகத்திலேயே தயாரிக்கப்பட்ட மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், பிரட் அல்வா, வெங்காய சம்பல், கத்திரிகாய் தால்சாவுடன் தடபுடல் விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து, பிரியா விடை பெற்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுவின் ஐந்து ஆண்டு கால பதவி நிறைவு பெற
இருப்பதால் நேற்று இறுதி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கும்மிடிப்பூண்டி
பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சேர்மன் சிவகுமார் தலைமை
வகித்தார். துணை சேர்மன் மாலதி முன்னிலை வகித்தார்.
செலவு, திட்ட
பணிகள், தொழிற்சாலை கட்டட வரைப்பட அனுமதி ஆகியவற்றின் மீது, 32
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும்
தங்களின் ஐந்து ஆண்டு அனுபவத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து பேசினர்.
அனைத்து
ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு மற்றும் தங்க
நாணயங்களை சேர்மன் சிவகுமார் வழங்கினார். துாய்மை பணியாளர்களுக்கு
ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர்கள் அனைவரும்
குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.