/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ஹாக்கி லீக் ஜி.எஸ்.டி., அணி வெற்றி
/
திருவள்ளூர் ஹாக்கி லீக் ஜி.எஸ்.டி., அணி வெற்றி
ADDED : ஆக 13, 2025 02:40 AM
சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி போட்டியில், ஜி.எஸ்.டி., மத்திய கலால் வரி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தியாந்த் வீரன்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி சங்கம் இணைந்து, திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி போட்டியை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடத்துகின்றன. இதில், சிறந்த 10 ஹாக்கி அணிகள், இரண்டு பிரிவாக பிரித்து போட்டிகள் நடக்கின்றன.
அந்தவகையில், நேற்று நடந்த 'ஏ' பிரிவு போட்டியில் ஜி.எஸ்.டி., மத்திய கலால் வரி அணி, தியாந்த் வீரன்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இதில் அசத்திய ஜி.எஸ்.டி., கலால் வரி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜி.எஸ்.டி., அணி சார்பில் செந்தில்குமார், ரஞ்சித், துஷால், செல்வகுமார் ஆகியோர், தலா ஒரு கோல் அடித்தனர்.
தியாந்த் வீரன்ஸ் அணி சார்பில், ஆனந்த் ஒரு கோல் அடித்து அணிக்கு ஆறுதல் தந்தார்.