/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலையம்- கடம்பத்துார் பேருந்துகள் இயக்க கோரிக்கை
/
திருவள்ளூர் ரயில் நிலையம்- கடம்பத்துார் பேருந்துகள் இயக்க கோரிக்கை
திருவள்ளூர் ரயில் நிலையம்- கடம்பத்துார் பேருந்துகள் இயக்க கோரிக்கை
திருவள்ளூர் ரயில் நிலையம்- கடம்பத்துார் பேருந்துகள் இயக்க கோரிக்கை
ADDED : நவ 09, 2024 09:29 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து கடம்பத்துார் வரை பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்ட தலைநகரான திருவள்ளூர் தற்போது வளர்ச்சியடைந்து உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து தேரடி வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரவு 10:00 மணி பேருந்து சேவை இருந்த நிலையில் தற்போது 8:00 மணியுடன் முடிவடைந்து விடுகிறது.
தினமும் ரயில் நிலையத்தில் இருந்து தேரடி, பேருந்து நிலையம், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கலெக்டர், எஸ்.பி., அலுவலம், மருத்துவக்கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் போதிய பேருந்து வசதி இல்லாததால், 40 ரூபாய் செலுத்தி ஆட்டோவில் பயணிக்கின்றனர்.
மேலும், கலெக்டர் அலுவலக பகுதி தற்போது வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் அதிகரித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, தேரடி, கலெக்டர் அலுவலகம், பாண்டூர், திருப்பாச்சூர் வழியாக கடம்பத்துார் ரயில் நிலையம் வரை பேருந்து சேவை இயக்க வேண்டும். இதனால், கடம்பத்துார்- திருவள்ளூர் வரை கூடுதல் பேருந்து வசதி கிடைக்கும்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பரிசீலனை செய்து, திருவள்ளூர் ரயில்நிலையம்-கடம்பத்துார் வரை பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.