/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ் சேவை இல்லாததால் திருவெள்ளவாயல் மக்கள் தவிப்பு
/
அரசு பஸ் சேவை இல்லாததால் திருவெள்ளவாயல் மக்கள் தவிப்பு
அரசு பஸ் சேவை இல்லாததால் திருவெள்ளவாயல் மக்கள் தவிப்பு
அரசு பஸ் சேவை இல்லாததால் திருவெள்ளவாயல் மக்கள் தவிப்பு
ADDED : நவ 07, 2025 12:13 AM

பொன்னேரி: மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் வழித்தடத்தில், கிராமங்கள் தோறும் நிறுத்தங்களும், பயணியர் நிழற்குடைகளும் இருந்தும், பேருந்து சேவை இல்லாததால், மக்கள் தவித்து வருகின்றனர்.
பொன்னேரியில் இருந்து மேட்டுப்பாளையம் - திருவெள்ளவாயல் வழித்தடத்தில், அனுப்பம்பட்டு, தேவதானம், வேலுார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்வி, சுகாதாரம், தொழில் என, பல்வேறு தேவைகளுக்கு இங்குள்ள மக்கள் பொன்னேரி வந்து செல்ல வேண்டும்.
இந்த வழித்தடத்தில் பேருந்து சேவை இல்லாததால், விவசாயிகள், பணிக்கு செல்பவர்கள், மாணவர்கள் என, பல்வேறு தரப்பினர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து, திருவெள்ளவாயல் மக்கள் கூறியதாவது:
கடந்த, 20ஆண்டுகளுக்கு முன் இந்த வழித்தடத்தில், அரசு பேருந்து சேவை இருந்தது. அதன் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டது.
தேவதானம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற வடஸ்ரீரங்கம் எனப்படும் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் பேருந்து சேவை இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த வழித்தடத்தில் உள்ள கிராமத்தினரும் பேருந்து சேவை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ஊருக்கு ஒரு பயணியர் நிழற்குடை மட்டும் காட்சி பொருளாக உள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

