ADDED : நவ 18, 2026 09:27 PM
கும்மிடிப்பூண்டி: வடமாநில தொழிலாளர்களிடம் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் இன்று (நவ.,18) கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அக் ஷய் தாஸ், 48. கும்மிடிப்பூண்டி அடுத்த ராமச்சேரிகண்டிகை கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இம்மாதம் 12ம் தேதி, இரவு பணி முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், அவரை வழி மறித்து, அவரின் மொபைல் போனை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, மாநெல்லுார் குந்தலிமேடு பகுதியை சேர்ந்த லோகேஷ், 18, மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹசன், 20, மேநளூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 22, ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல வடமாநில தொழிலாளர்களிடம், மொபைல் போன் பறித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
