/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி பேருந்து நிலைய பணிகள்; 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
/
திருத்தணி பேருந்து நிலைய பணிகள்; 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
திருத்தணி பேருந்து நிலைய பணிகள்; 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
திருத்தணி பேருந்து நிலைய பணிகள்; 3 மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
ADDED : மார் 18, 2025 12:47 AM

திருத்தணி; திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் குறுகிய இடத்தில் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நடப்பதை தடுப்பதற்காக, திருத்தணி -- அரக்கோணம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கரில், 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை, அமைச்சர் நேரு 2022ல் துவக்கி வைத்தார்.
புதிய பேருந்து நிலையம் அமைத்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஒப்பந்ததாரருக்கு, 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பணிகள் துரித வேகத்தில் நடந்து வந்தன. சில காரணங்களால் ஒப்பந்ததாரர், எட்டு மாதங்களுக்கு மேலாக பணிகளை நிறுத்தினார்.
இதையடுத்து, பேருந்து முகப்பு பகுதியில் முருகன் கோவில் கோபுரம் வடிவம் அமைப்பதற்கு, தமிழக அரசு கூடுதலாக, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதியை அரசு வழங்கியது.
கடந்த டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகள் மீண்டும் நடந்து வருகிறது. இப்பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து தருமாறு, ஒப்பந்ததாரரிடம் நகர்மன்ற தலைவர் சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவர் மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, பேருந்து நிலைய முகப்பு பகுதியில் முருகன் கோவிலில் உள்ளது போன்ற மூன்று கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இரண்டு கோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், ஒரு கோபுரம் மற்றும் விடுபட்ட பணிகள் மூன்று மாதத்திற்குள் முடித்து தருமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.