/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி ; ஆபத்தான கம்பம் அச்சத்தில் மக்கள்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி ; ஆபத்தான கம்பம் அச்சத்தில் மக்கள்
திருவள்ளூர்: புகார் பெட்டி ; ஆபத்தான கம்பம் அச்சத்தில் மக்கள்
திருவள்ளூர்: புகார் பெட்டி ; ஆபத்தான கம்பம் அச்சத்தில் மக்கள்
ADDED : நவ 27, 2024 01:17 AM

ஆபத்தான கம்பம் அச்சத்தில் மக்கள்
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், சில ஆண்டுகளுக்கு முன் கண்காணிப்பு கேமராக்களுக்காக கம்பங்கள் வைக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இன்றி கேமராக்கள் பழுதானதால், அவை வைக்கப்பட்ட இரும்பு கம்பங்கள் துரு பிடித்து பயனற்று நிற்கிறது.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலை எதிரே உள்ள கம்பம் ஒன்று, பாதியாக முறிந்து சாலையில் சாய்ந்து கிடக்கிறது. ஆபத்தான உள்ள அந்த கம்பத்தை, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எந்த நேரத்திலும் அந்த கம்பம் துண்டாகி விழும் என்ற அச்சம் நிலவுவதால், சம்பந்தப்பட்ட அரசு துறையினர் உடனடியாக அந்த கம்பத்தை அகற்ற வேண்டும்.
- வி.வேந்தன், கும்மிடிப்பூண்டி.
குடிமையமாக மாறிய பயணியர் நிழற்குடை
திருவாலங்காடு ஒன்றியம் பொன்னாங்குளம் கிராமத்தில் பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட மக்கள் பேரம்பாக்கம், திருவாலங்காடு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
பயணியருக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை, சில குடிமகன்கள் ஆக்கிரமித்து மது குடிக்கும் மையமாக மாற்றி உள்ளனர். பகல் நேரத்திலேயே சிலர், மது அருந்திவிட்டு, டம்ளர் வாட்டர் பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால், பயணியர் அங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
இதனால், பயணியர் மழையிலும், வெயிலிலும் பேருந்து வரும் வரை காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.
காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.தினகரன், பொன்னாங்குளம்.
சேதமான மின்கம்பம் மாற்றப்படுமா?
ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் உள்ளது கிராம நிர்வாக அலுவலகம். இந்த அலுவலகத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு தினமும், 100க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த அலுவலகத்தின் பின்புறம் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள மின்கம்பத்தில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செல்கிறது. இந்த மின்கம்பம் அமைத்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், தற்போது சிமென்ட் காரை பெயர்ந்து, கம்பி வெளியே தெரிகிறது.
மின்வாரிய உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிமென்ட காரை பெயர்ந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
- மா. கன்னிமாறன், ஊத்துக்கோட்டை.

