/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிப்பு...ஏமாற்றம்: வளர்ச்சி திட்டம் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தி
/
பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிப்பு...ஏமாற்றம்: வளர்ச்சி திட்டம் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தி
பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிப்பு...ஏமாற்றம்: வளர்ச்சி திட்டம் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தி
பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிப்பு...ஏமாற்றம்: வளர்ச்சி திட்டம் அறிவிக்காததால் மக்கள் அதிருப்தி
UPDATED : மார் 17, 2025 02:38 AM
ADDED : மார் 16, 2025 09:35 PM

தமிழக பொது பட்ஜெட்டில் திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிக்கான எவ்வித
அறிவிப்பும் வெளியாகாததால், தாங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதாக மக்கள்
ஏமாற்றமடைந்துஉள்ளனர். இனிவரும் துறை ரீதியான மானிய கோரிக்கையிலாவது
வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்படுமா என, திருவள்ளூர் மாவட்ட மக்கள்
காத்திருக்கின்றனர்.
தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான பொது
பட்ஜெட்டை, கடந்த 14ம் தேதி சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
வெளியிட்டார். அதில், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு
முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் வாரி
வழங்கப்பட்டன.
புதிய குடியிருப்புகள்
அதேசமயம், சென்னை
மாநகராட்சிக்கு மிக அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு எவ்வித வளர்ச்சி
திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.
இதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில், திருவள்ளூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது என, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை
மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 45 கி.மீட்டர் துாரத்தில் திருவள்ளூர்
மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்
கிடைக்கும் அனைத்து சலுகைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில்
பணிபுரிவோருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், சென்னை மாநகரின் ஒரு அங்கமாக மாறிய திருவள்ளூரில், ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.
திருவள்ளூர்
மாவட்டத்தில், சென்னை நகரை ஒட்டி அமைந்துள்ள பூந்தமல்லி, ஆவடி, மீஞ்சூர்,
புழல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அபார்ட்மென்ட்களும், 'வில்லா'
பிளாட்களும் உருவாகி வருகின்றன.
இதனால், திருவள்ளூர் மாவட்டம் அசுர வளர்ச்சியடைந்து வருவதுடன், போக்குவரத்து வாகனங்களும் அதிகரித்து வருகின்றன.
மேலும்,
திருவள்ளூர் - காக்களூர், மப்பேடு, கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை
உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பேட்டைகளும், தொழிற்சாலைகளும் அதிமாக உள்ளன.
எதிர்பார்ப்பு
இவ்வாறு
தொழிற்சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அதிகரித்து வரும்
நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் இடம்பெறவில்லை.
திருவள்ளூர்
நகரின் நீண்ட கால கோரிக்கையான புறவழிச்சாலை திட்டம், அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லுாரி, தொழிற்சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் குறித்து,
பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆண்டுதோறும் பூண்டி
நீர்த்தேக்கம் மற்றும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் இருந்து உபரி நீர் வீணாக
கடலில் கலக்கிறது. வீணாகும் உபரி நீரை சேகரிக்க எந்த முனைப்பும்
பட்ஜெட்டில் வெளியாகவில்லை.
பொது பட்ஜெட்டில் தான், திருவள்ளூர்
மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இனி வரும் துறை ரீதியான மற்றும் மானிய
கோரிக்கையிலாவது, வளர்ச்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என,
எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர் குழு-