/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
பழவேற்காடில் குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
பழவேற்காடில் குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
பழவேற்காடில் குடிநீர், சுகாதார வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 14, 2025 12:07 AM
பழவேற்காடு,
பழவேற்காடு மீனவப்பகுதி, மாவட்டத்தின் சுற்றுலா தளமாக திகழ்கிறது. இது வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அழகிய கடற்கரை, கலங்கரை விளக்கம், டச்சு கல்லறைகள், பறவைகள் சரணலாயம் உள்ளிட்டவை உள்ளன.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணியர் இங்கு வருகின்றனர்.
புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் நாளில் அதிகளவில் குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணியர் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும். காணும் பொங்கல் நாளில், 30,000க்கும் அதிகமானோர் வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை.
கடலில் ஜாலியாக குளித்து விளையாடுபவர்கள் தங்களது உடைகளை மாற்றிக் கொள்ளவும், நன்னீரில் குளிக்கவும், அவசர உபாதகளை கழிக்கவும் அங்கு சுகாதார வளாகம் இல்லை.
குடிநீர். மின்விளக்கு வசதியில்லாததால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், நாளை மறுநாள், காணும் பொங்கல் நாளில் பழவேற்காடு பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல, பழவேற்காடு பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சரியான திட்டமிடல் அவசியம். கடலில் குளிப்பவர்களை கண்காணிக்க வேண்டும். கடந்த, புத்தாண்டு தினத்திலும், இருவர் கடலில் குளிக்கும்போது உயிரிழந்து உள்ளனர்.
அதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல் இருக்க, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.