/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு
/
டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு
ADDED : செப் 06, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் மேலாண்ட தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 58; டிராக்டர் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் பேரம்பாக்கம் வழியாக டிராக்டரில் சென்ற போது திடீரென கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்தவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தனர். அவர்கள் பரிசோதனை செய்ததில், ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.