/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
/
ஊத்துக்கோட்டை சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ஊத்துக்கோட்டை சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ஊத்துக்கோட்டை சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 09, 2025 01:37 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் நடந்து வரும் இணைப்பு மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, வேடங்கிநல்லுார் ஐ.சி.எம்.ஆர்., அருகில், மேம்பாலம் கட்டுமான பணி நடக்கிறது.
திருத்தணியில் இருந்து திருநின்றவூர் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்திலும், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக வாகனங்கள் சென்று வரும் இருவழி பாதை, மேம்பாலத்தின் கீழும் செல்லும் வகையில், கட்டுமானப் பணி நடக்கிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால், மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு பாதையில், குளம் போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால், வாகனங்கள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றன.
இதையடுத்து, அருகில் உள்ள மற்றொரு பாதையில், வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், பாலத்தின் கீழ் நெரிசல் நிலவி வருகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், மேம்பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுத்து, பணியை நிறைவேற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

