/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
/
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 05, 2025 01:21 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடைவீதி நிறுத்தம், எந்நேரமும் நெரிசல் மிகுந்த பகுதி. சனிக்கிழமை தோறும் காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. அப்போது, அதிகளவில் மக்கள் வருவர்.
இந்நிலையில் வாரச்சந்தையை ஒட்டி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அவ்வழியாக சென்றனர். நேற்று மாலை 5:00 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், சாலையில் சென்ற வாகனங்களை மறித்தார். பின், சாலையின் நடுவே அமர்ந்து வாகனங்களுக்கு வழிவிடாமல் அலப்பறையில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தும் கேட்காமல், அவர்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
பொறுமை இழந்த அப்பகுதி இளைஞர்கள், அவரை குண்டுகட்டாக துாக்கி ஓரமாக உட்கார வைத்தனர். இதனால், அப்பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதித்தது. சின்னம்மாபேட்டையில் போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவதும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தொடர்வதால், திருவாலங்காடு போலீசார் கண்காணிக்க வேண்டும் என, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.