/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலையம் முன் நெரிசல் ஆட்டோக்கள் செல்வதற்கு தடை விதிப்பு

ADDED : ஜன 19, 2025 02:38 AM

திருவள்ளூர்,திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நெரிசலை தவிர்க்க ஆட்டோக்கள் நுழைவதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இவ்வழியாக, புறநகர் மின்சார ரயில் மற்றும், திருப்பதி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.திருவள்ளூரில் இருந்து, தினமும், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரயில் பயணம் செய்கின்றனர்.
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், இருசக்கர வாகனம், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ரயில் நிலையம் வருகின்றனர்.
அதிகளவில் பயணியர் ஆட்டோக்களிலேயே பயணம் செய்கின்றனர். இதனால், ஆட்டோக்கள் ரயில் நிலைய நுழைவாயில் வரை வருகின்றன. இதன் காரணமாக, ரயில்கள் வந்ததும் வெளியில் வரும் பயணியரும், உள்ளே செல்வோரும் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
மேலும், இருசக்கர வாகனங்களில் வருவோர், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ரயில் நிலையம் வரை ஆட்டோக்கள் வருவதை தவிர்க்க, போலீசார் ரயில் நிலையத்தில் இருந்து, 50 மீட்டர் துாரத்தில் சாலை நடுவில் இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர்.