/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் ரயில் பயணியர் அவதி
/
ஆக்கிரமிப்பு கடைகளால் ரயில் பயணியர் அவதி
ADDED : செப் 08, 2025 11:29 PM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவை, ரயில் நிலைய வளாகத்துடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து, 100 மீட்டரில் பழைய தபால் தெரு சாலை அமைந்துள்ளது. இடைப்பட்ட பகுதி முழுதும் அரசு புறம்போக்கு நிலம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர்.
தற்போது, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெருவில், ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
தடைகளாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால், ரயில் பயணியர் 1 கி.மீ., சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் நேர விரயத்தால், ரயில் பயணியர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, பழைய தபால் தெருவில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய வளாகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.