/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுப்பம்பட்டு தண்டவாளத்தில் விரிசல் சீரமைப்பு பணிகளால் ரயில்கள் தாமதம்
/
அனுப்பம்பட்டு தண்டவாளத்தில் விரிசல் சீரமைப்பு பணிகளால் ரயில்கள் தாமதம்
அனுப்பம்பட்டு தண்டவாளத்தில் விரிசல் சீரமைப்பு பணிகளால் ரயில்கள் தாமதம்
அனுப்பம்பட்டு தண்டவாளத்தில் விரிசல் சீரமைப்பு பணிகளால் ரயில்கள் தாமதம்
ADDED : அக் 25, 2024 01:56 AM

பொன்னேரி:கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில், தினமும், 80க்கும் அதிகமான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், கல்வி, தொழில் உள்ளிட்ட பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பயணியர் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், வடமாநிலங்களுக்கு சென்றுவரும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என தொடர் போக்குவரத்து உள்ள மார்க்கமாக இது அமைந்து உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே ஊழியர்கள் தண்டவாள கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்கண்ட இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள அக்கரம்பேடு கிராமத்தில் சென்னை செல்லும் மார்க்க தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டனர்.
உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சென்னை நோக்கி பயணித்த, புறநகர், தாதாநகர் - எர்ணாகுளம், செகந்திரபாத் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ரயில்வே பராமரிப்பு பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தினர். பின், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை பகுதியை மாற்றும் பணிகளில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் அனைத்து ரயில்களும் இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. புறநகர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில் பயணியர் நீண்டநேரம் காத்திருக்க முடியாமல், ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றனர்.