/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் இலவச வீட்டு மனைக்கு காத்திருப்பு
/
குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் இலவச வீட்டு மனைக்கு காத்திருப்பு
குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் இலவச வீட்டு மனைக்கு காத்திருப்பு
குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் இலவச வீட்டு மனைக்கு காத்திருப்பு
ADDED : ஜூலை 05, 2025 10:46 PM

பொன்னேரி:ஆரணி ஆற்றின் கரையோரத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வரும் பழங்குடியின மக்கள், இலவச வீட்டுமனைக்காக, 30 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
பொன்னேரி - தத்தமஞ்சி சாலையில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள எல்.எஸ்.பூதுார் கிராமத்தில், 25 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்கள், 30 ஆண்டுகளாக கூரை வேய்ந்த குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.
ஆற்றில் மீன்பிடிப்பது மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நிரந்தரமான வீடு இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டுமனை கேட்டு, 30 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவரும், அதே கிராமத்தைச் சேர்ந்தவருமான கே.கிருஷ்ணன் கூறியதாவது:
வீட்டுமனை கேட்டு தொடர்ந்து வருவாய்த் துறையினரிடம் மனு அளித்து வருகிறோம். கிராமத்தில் அரசு நிலங்கள் உள்ளன.
ஒருபுறம் மாநில நெடுஞ்சாலை, மறுபுறம் ஆரணி ஆற்று கரை என, பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கின்றனர்
தற்போது, தமிழக முதல்வர் அறிவித்த வீட்டுமனை திட்டத்தில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. நீண்ட காலமாக காத்திருக்கும் பழங்குடியின மக்களுக்கு, வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.